Cinema

'விஜய் 67' படம் குறித்து வெளியான ருசீகர Update.. Music முதல் Edit வரை.. அதிகாரபூர்வ தகவல் இதோ !

கடந்த 2017-ல் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்தான் 'மாநகரம்'. இந்த படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வெளியாகி திரை ரசிகர்களுக்கிடேயே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இது லோகேஷிற்கு ஒரு நல்ல பெயரையும் கொடுத்தது.

அதன்பிறகு இவரது இயக்கத்தில் 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம் பெரும் பெயரை இவருக்கு பெற்று தந்தது. மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்தை அடுத்து, இவரது அடுத்த படமே விஜயுடன் ஒப்பந்தமானது. அதன்படி 2021-ல் மாஸ்டர் படம் வெளியானது. இது லோகேஷிற்கு மட்டுமின்றி ஒரு வில்லனாக விஜய் சேதுபதிக்கும் பெரிய பெயரை பெற்று தந்தது.

தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசையில் ஒலித்த மாஸ்டர் மியூசிக் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலுடன் ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு (2022) வெளியான தமிழ் படங்களில் சிறந்த படமாக திகழ்ந்த விக்ரம் இவரை தற்போது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலுக்கு ஒரு ஹிட் கொடுத்த படம் என்றால் அது 'விக்ரம்' தான். மேலும் இந்த படத்தை பார்க்கும் முன்பு 'கைதி' படத்தை பார்க்க வேண்டும் என்று லோகேஷ் சொன்னது ஆரம்பத்தில் அதிகமானோருக்கு புரியவில்லை என்றாலும், படத்தை பார்த்த பிறகு இரண்டு படங்களுக்கும் உள்ள கனெக்ஷன் தெரியவந்தது.

இதையடுத்தே ஹாலிவுட்டில் மார்வெல் யுனிவர்ஸ் (MCU) என்று சொல்வது போல் கோலிவுட்டில் லோகி யுனிவர்ஸ் (LCU) என்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. விக்ரமை தொடர்ந்து விஜயை வைத்து அவரது 67-வது படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது வாரிசு வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த படத்தின் ப்ரோமோ ஷூட் அண்மையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஒவ்வொரு அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இந்த படமும் விக்ரம் படத்துடன் தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு Seven Screen Studio "இன்று மாலை 6.07க்கு முக்கிய அப்டேடுக்கு தயாராக இருங்கள்.." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தது.

இந்த நிலையில் தற்போது விஜயின் அடுத்த படமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது Seven Screen Studio தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில் "விஜயின் 67-வது படத்தை கைதி, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். S S லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் பிலோமின் ராஜ், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ், ரத்தின குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுக்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த படத்தை Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக இந்த நிறுவனம் மாஸ்டர், மகான், கோப்ரா, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "ஆளப்போறான் தமிழன்" பாடல் பாடகர் மீது BOTTLE வீச்சு - இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை பாடியதால் ஆத்திரம்