Cinema
“MGR விருது பெற்ற பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்” - திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் !
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா (89) உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜமுனா, நடிகர் சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை ஜமுனா தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசின் சாரில் 1999ல் எம்.ஜி.ஆர் விருது நடிகை ஜமுனாவிற்கு வழங்கப்பட்டது.
சினிமா துறையை தாண்டி, நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நாள் குறைவு காரணமாக மரணமடைந்த நடிகை ஜமுனாவின் (வயது 86) இழப்பு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை ஜமுனாவின் மறைவு மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!