Cinema
'வாரிசு’ படத்தின் குஷ்பு நடித்த காட்சி நீக்கப்பட்டதா ? வெளியான தகவல்.. முழு விவரம் என்ன ?
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெய சுதா, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 11-ம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதைய நிலையில் 'வாரிசு' படம் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்து இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தெலுங்கில் இந்த படம் நேற்று வெளியாகி அங்கும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், 'வாரிசு' படத்தோடு போட்டியில் இறங்கிய நடிகர் அஜித் நடித்த 'துணிவு' படமும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதோடு சமூக வலைத்தளங்களில் இரு ரசிகர்களும் தங்கள் நாயகனின் படத்தை முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பின் போது அதில் பிரபல நடிகை குஷ்பூ இருக்கும் வெளியான புகைப்படங்களும் வைரலாகியது. ஆனால் 'வாரிசு’ படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் குஷ்பு நடித்த காட்சி இல்லாததை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், ’வாரிசு’ படத்தில் சங்கீதா மற்றும் ராஷ்மிகாவின் சித்தியாக குஷ்பு நடித்திருந்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் குஷ்பூ இருக்கும் சில கட்சிகளையாவது படத்தின் காட்டி இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!