Cinema
மணிரத்னத்தின் ‘குரு’ : “மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் வேண்டுமா?” - IRCTCயிடம் கேள்வி கேட்ட Netflix !
தமிழில் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு, 12 ஜனவரி அன்று வெளியான திரைப்படம்தான் 'குரு'. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தியில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற "நன்னாரே நன்னாரே" பாடல் அந்த காலத்தில் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் நடனமாடக்கூடிய விருப்ப பாடலாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
குறிப்பாக "மையா மையா" பாடல் இப்போதும் கூட அனைவருக்கும் பிடித்த பாடலில் ஒன்றாக அமைந்துள்ளது. அதோடு "ஆருயிரே மன்னிப்பாயா" பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அண்மையில் கூட இப்படத்தின் பாடலான 'நன்னாரே' பாடலில் இடம்பெற்றிந்த "விடைகொடு சாமி விட்டு போகின்றேன்" என்ற வரிகள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு கன்டென்டாக மாறியது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி நேற்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை Netflix நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இந்த படத்தை புதுவிதமாக ப்ரொமோட் செய்துள்ளது.
அதாவது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்குடன் செல்வதற்காக இரயில் நிலையம் செல்வார். அப்போது அபிஷேக் - "உன்னிடம்தான் டிக்கெட் இல்லையே" என்று கூற, உடனே ஐஸ்வர்யா ராயோ "மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் வேண்டுமா?" என்று கேள்வி எழுப்புவார்.
இந்த வசனத்துடன் கூடிய புகைப்படத்தை பகிர்ந்த Netflix படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தது. மேலும் இதனை இந்திய இரயில்வே நிறுவனமான IRCTC-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து "உங்களால் இதனை உறுதிப்படுத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!