Cinema
அலைமோதிய கூட்டம்.. கால் முறிந்து கிடந்த அஜித் ரசிகர் - ஓடிப்போய் காப்பாற்றிய விஜய் ரசிகர்கள்.. நெகிழ்ச்சி
தமிழ்நாட்டில் நேற்று அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படங்களை காண இருதரப்பு ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு முண்டியடித்துக்கொண்டிருக்கின்றனர்.
அதிலும் அதிகாலை ஷோவிற்கு செல்ல ரசிகர்கள் வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி நேற்று 1.30 மணி நள்ளிரவு ஷோவிற்கு காத்துக்கொண்டிருந்த அஜித் விஜய் ரசிகர்கள் அனைவரும் உள்ள ஓடிப்போய் படத்தை காண முற்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த இந்த நிகழ்வு, சேலத்திலுள்ள ஒரு பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டரிலும் நிகழ்ந்தது. அப்போது துணிவு படத்தை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டிருந்த போது, அஜித் ரசிகர் ஒருவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் காலில் அடிப்பட்டு வலியால் துடிதுடிக்க இதனை கண்டிராமல், ரசிகர்கள் அவரை மிதித்தும் உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது இவர் வலியால் அலறித்துடித்து கொண்டிருந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இவரை கண்ட வாரிசு படத்தை காண வந்த விஜய் ரசிகர்கள் நவீன், கவின், நற்குண ராஜ் ஆகிய மூன்று பேரும் உடனே ஓடிப்போய் அந்த இளைஞரை தூக்கினர். தொடர்ந்து அவருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு ஆம்புலன்சிற்கும் போன் செய்து வரவழைத்தனர்.
தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பின்னர் அடிபட்டு கிடந்த இளைஞரை விஜய் ரசிகர்கள் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.
இவர்களது இந்த நெகிழ்ச்சி செயலை அறிந்து அங்குப் பணியிலிருந்த பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார், காப்பாற்றிய இளைஞர்களான நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.தொடர்ந்து இவர்களது செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!