Cinema

முதல்முறை அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் 'அ' எழுத்தில் தொடங்கும் அந்த தமிழ் மாஸ் ஹீரோ ! #AK62 Update

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவு நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 31-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே அஜித்தின் அடுத்த படமான AK62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவுக்கு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் திரிஷா அதன்பிறகு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், தற்போது இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானமும் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக அரவிந்த் சாமி, ஜெயம்ரவியுடன் 'தனி ஒருவன்', மற்றும் 'போகன்' ஆகிய இரு படங்களில் மாஸ் வில்லனாக காட்சியளித்தார். தனி ஒருவனில் ஹீரோ ரவியை விட, வில்லன் அரவிந்த் சாமிக்கே ரசிகர்கள் அதிகளவு இருந்தனர். தற்போது அஜித்துக்கு வில்லனாக முதல்முறை நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் தற்போது #AK62 என்ற வார்த்தை ட்ரெண்டிங்கில் உள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் துணிவு படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், தற்போது அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி அவர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !