Cinema
இளைஞர்களே உஷார்..! - SLIM ஆக ஆசைப்பட்ட இளைஞர்.. மருந்து சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம் !
காஞ்சிபுரம் மாவட்டம், படைப்பை அருகே உள்ள சோமங்கலம் என்ற பகுதியில் உள்ளது கருணீகர் என்ற தெரு. இங்கு சூர்யா என்ற 20 வயதுமிக்க இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்தது வந்துள்ளார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் தனது உடல் பருமனாக இருப்பதாக எண்ணி feel பண்ணிய இவர், அதனை குறைக்க நினைத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் மருந்து நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்களும் சூர்யாவின் பிரச்னையை கேட்டு அதற்காக ஒரு மருந்தை கொடுத்துள்ளனர்.
சூர்யாவும் அதனை வாங்கி வந்த நிலையில், தொடர்ந்து 10 நாட்களாக அந்த மருந்தை தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் எடை குறைய தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனாலே சூர்யா அந்த மருந்தை தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி சூர்யாவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் எடையை குறைக்க விரும்பிய இளைஞர் ஒருவர் மருந்து வாங்கி சாப்பிட்ட பின் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !