அரசியல்

“பீகாரும், உ.பியும் இன்று எப்படி இருக்கிறது?.. தமிழ்நாடு எப்படி இருக்கிறது?” - ஆளுநருக்கு TR பாலு கேள்வி!

தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பீகாரும், உ.பியும் இன்று எப்படி இருக்கிறது?.. தமிழ்நாடு எப்படி இருக்கிறது?” - ஆளுநருக்கு TR பாலு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “இந்தியாவை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். ஆங்கிலேயரின் கல்வி திட்டத்தின் கீழ் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பலர் கல்வியை கற்றிருக்கவே முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

“பீகாரும், உ.பியும் இன்று எப்படி இருக்கிறது?.. தமிழ்நாடு எப்படி இருக்கிறது?” - ஆளுநருக்கு TR பாலு கேள்வி!

இவரது பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மட்டுமல்ல, அரசியல் தலைவர்களிடமும் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.இரவி.

எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.

“பீகாரும், உ.பியும் இன்று எப்படி இருக்கிறது?.. தமிழ்நாடு எப்படி இருக்கிறது?” - ஆளுநருக்கு TR பாலு கேள்வி!

வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட - அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

“பீகாரும், உ.பியும் இன்று எப்படி இருக்கிறது?.. தமிழ்நாடு எப்படி இருக்கிறது?” - ஆளுநருக்கு TR பாலு கேள்வி!

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Related Stories