Cinema
இலையும் முள்ளும் to பாலிவுட் படம் வரை.. பிரபல மலையாள இயக்குனர் கே.பி.சஷி மறைவு : திரையுலகத்தினர் இரங்கல்!
மலையாள சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் கே.பி.சஷி. எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான கே.தாமோதரனின் மகன் கே.பி.சஷி ஆவர். இவர் 1994லில் வெளிவந்த இலையும் முள்ளும் படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் அப்படம் பெரும் வெற்றியை பெற்றதன் மூலம் அவருக்கு தேசிய விருதும் கிடைக்க செய்தது.
அதுமட்டுமல்லாது பல்வேறு புகழ்பெற்ற ஆவணப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.1970லில் டெல்லி ஜே.என்.யுவில் கார்ட்டூன் துறையில் பணியாற்றினார். அதுமட்டுமல்லாது 2003ம் ஆண்டு வெளியான ஏக் அலக் மெளசம் படத்திலும் நடித்து பாலிடிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.
பல்வேறு தவிர்க்க முடியாத முக்கிய படங்களை கொடுத்தவர் கே.பி.சஷி. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதைத்தொடர்ந்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கே.பி.சஷி உயிரிழந்தார். அவரது மறைவு சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியநிலையில், அவருக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!