Cinema
இயக்குநராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்: 'அதுவும் நடராஜன் கதையிலா?' -வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய தனது திரை பயணத்தை காமெடி, காமெடி கலந்த ஹீரோ என்ற லெவெலுக்கு தன்னை கொண்டு சென்றுள்ளார்.
இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், படலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தற்போது திரையுலகில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் இவரது இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இவரது ரசிகர்கள் தான் காரணம். இவரது நடிப்பால் 2கே கிட்ஸை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான நாயகனாக இவர் விளங்குகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டான்' படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் அதன்பிறகு வெளியான 'பிரின்ஸ்' படம் எதிர்பார்த்த அளவு வசூல் கூட சாதனை படைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது இவர் 'அயலான்', 'மாவீரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு ஆடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதை விரைவில் படமாகவுள்ளதாகவும், அதில் நடராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இதனை நடராஜனும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை சிவர்கார்த்திகேயன் இயக்கி நடிக்கவுள்ளதாக நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறுகையில், "என் பயோபிக்கை என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகுதான் எடுக்கவேண்டும் எனச் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கிறார். மேலும் இதனை அவரே இயக்கவும் உள்ளார் என நினைக்கிறேன்" என்றார்.
முன்னதாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இந்த படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவர் இப்படி கூறியிருப்பது திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின்மூலம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!