Cinema

'வாரிசு' Update : விஜய் படத்தில் இணைந்த சிம்பு.. இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டம் !

விஜயின் வாரிசு சிம்பு இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் பாடலும் பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸான கம் பேக் கொடுத்திருக்கும் நடிகர் சிம்பு, தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் 'தி வாரியர்' படத்தில் இடம்பெற்ற 'புல்லட்..' பாடலை பாடினார். மேலும் ஹாலிவுட் படமான 'டபுள் XL' படத்தில் 'தாலி தாலி..' என்ற பாடலை பாடியுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் தற்போது விஜய் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தெலுங்கு இயக்குநரான வம்சியால் இயக்கப்பட்டு, தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜால் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய், மானசி குரலில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு பாடலை நடிகர் சிம்பு பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவரது பாடல்கள் அதிகமானவை ஹிட் ஆகியிருக்கும் நிலையில், இந்த பாடலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'வாரிசு' படத்தை பண்டிகை காலங்களில் தெலுங்கு மாநிலங்களில் வெளியிட கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்னையை பேசி சுமூகமாக முடித்து, தெலுங்கு மொழிகளில் வாரிசு திரையிட சிக்கல் இல்லை என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தெலுங்கில் விஜயின் 'வாரிசு' பட வெளியீட்டுக்கு சிக்கலா ? - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய விளக்கம்!