Cinema
#RIP : பிரபல தமிழ் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானார்.. திரை பிரபலங்கள் இரங்கல் !
1974-ம் ஆண்டு வெளியான 'முருகன் காட்டிய வழி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, கமல், ரஜினி படங்களிலும் நடித்துள்ளார்.
90-களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், என பன்முக கலைஞராகவும் விளங்குகிறார். இவரது இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'த்ருஷ்யம்' - மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு த்ரிஷ்யம், பாபநாசம் என்ற பெயர்களில் வெளியானது.
மேலும் இவரது தயாரிப்பில் 1979-ல் வெளியான 'நீயா' படம் பெரிய அளவில் தமிழில் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை இவரது தாயாரும் சேர்ந்து தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இவரது தாயாரான கிரிஜா பக்கிரிசாமிக்கு தற்போது 81 வயதாகும் நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீ பிரியாவின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. கிரிஜா பக்கிரிசாமி 'நீயா', 'நட்சத்திரம்', காதோடு தான் நான் பேசுவேன்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!