Cinema
#துணிவு : "ஜெயிக்கிற வரைக்கும் Try பண்ணுவேன்" -அஜித் வசனத்தை குறிப்பிட்டு பதிவு வெளியிட்ட வைசாக் -காரணம்?
நடிகர் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, அஜித்தின் வசனத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பாடகர் வைசாக்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சில தோல்வியை தழுவினாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களால் தூக்கி விடும். இதனாலே இவர் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்டாராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைத்துள்ளது.
அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அண்மையில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காக்கா கதை ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட வைசாக், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இணைந்து ஒரு புகைப்படத்தை அண்மையில் தனது சமூக வலைதளங்கள் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் "எதிர் பாராததை எதிர் பாருங்கள்" என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி இருக்கையில், தற்போது பாடகர் வைசாக் தற்போது நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் அதில் அஜித் நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளியான முகவரி திரைப்படத்தில் அஜித் கூறிய வசனத்தை மேற்கோள் காட்டி "Just remember ''முகவரி மொட்டைமாடி சீன்' - ஜெயிக்கலனா என்ன பண்ணுவ? Ak - ஜெயிக்கிற வரை Try பண்ணுவேன்" என்று குறிப்பட்டுள்ளார்.
இதன்மூலம் துணிவு படத்தில் வைசாக் இடம்பெற்றுள்ளார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் படலாசிரியரா அல்லது பாடகரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது. விரைவில் அதற்கும் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்