Cinema
மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை’ திரைப்படம் - கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் !
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இதில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியதை அடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தின் துவக்க விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின் துவக்க நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Also Read
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!