Cinema
“அஜித் சார் ரசிகனா என்ன பண்ணணுமோ பண்ணிருக்கேன்..” - துணிவு பட பாடல் குறித்து ஜிப்ரான் தகவல் !
அஜித் சாருக்கு ஒரு ரசிகனா என்ன பண்ணணுமோ பண்ணிருக்கேன்.. என்று துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய அளவில் தூக்கி விடும். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பொங்கலையொட்டி விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது 'துணிவு' படத்தின் பாடல் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ருசீகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "அஜித் சாருக்கு ஒரு ரசிகனா என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ, எந்த மாதிரி நடனம் இருக்கும்னு நினைக்கிறேனோ அதை பண்ணியிருக்கேன். இந்த படத்தின் பாடல்கள் மாஸாக இருக்கும். வேறு எதையும் கேட்க வேண்டாம்" என்றார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!