Cinema

மணிரத்னம் பட நாயகன்கள், GVM பட நாயகிகளை காதலித்தால் நிலைமை என்னவாயிருக்கும்? ஒரு பார்வை

ஓர் ஆணிடம் ஒரு பெண் ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்கிறாள். அவனுக்கு அந்த விஷயம் முக்கியம். அவள் பேச்சை கேட்க மறுத்து விடுகிறான். அவர்கள் இருவரும் காதலர்கள்.

காதலன் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறாள் பெண். காதலற்ற பொழுதை மேலும் வெப்பமாக்க மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது. காற்றில் அடிக்கும் ஜன்னல் கதவை அடைக்க பெண் செல்கிறாள். ஜன்னலுக்கு வெளியே மழையில் நனைந்தபடி நாயகன் பைக்கில் நின்று கொண்டிருக்கிறான் இவளுக்காக!

மெளன ராகம்!

மணிரத்னத்தின் படங்களில் வரும் நாயகர்களின் துடுக்குத்தன காதலை ரசிக்காத பெண்களே இல்லை எனலாம். கார்த்திக், அரவிந்த்சாமி, மாதவன் என தடாலடி ஆதிக்க காதலை வெளிப்படுத்தும் மணிரத்ன நாயகர்கள் பெண்களை மயக்குவதில் நமக்கு வில்லர்கள்.

துண்டு மறந்து குளிக்க செல்லும் மனைவிக்கு துண்டுக்கு பதிலாக தன் சட்டையை கழற்றிக் கொடுத்துவிட்டு, அவள் வெளியே வந்ததும் 'அது என் சட்டை.. கழட்டிக் கொடு' என விரட்டும் அர்விந்த்சாமி... தனக்கு சாப்பாடு வைக்கும் சரண்யாவை 'சாப்பிட்டியா' என கேட்டு, அவர் இல்லையென்றதும் அவரின் கையை காண்பித்து 'சாப்பிடாமதான் இவ்ளோ ஒல்லியா இருக்கே!' என வலிந்து ஊட்டிவிடும் கமல்....

சிறிது நேரம் தாமதத்துக்கு கோபம் கொள்பவனை திட்டியபடி வீட்டுக்கதவை திறந்து உள்ளே வந்ததும், அவள் பேச்சு எதையும் பொருட்படுத்தாமல், 'இதுக்குத்தான் இவ்ளோ நேரம் காத்துக்கிட்டிருந்தேன்' என கட்டிப்பிடிக்கும் மாதவன்.... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். மணிரத்னத்தின் இந்த நாயகர்களை இன்றும் பெண்கள் ரசிக்கவே செய்கிறார்கள்.

யதார்த்தத்தில் இன்றைய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? கெளதம் வாசுதேவனின் நாயகிகள் போல் இருக்கின்றனர்!

'I feel like too much with this love. We need a break..' என்றோ 'We should have spaces' என்றோ பேசும் பெண்கள்தான் இன்றைய யதார்த்தம்.

மணிரத்னம் பட பாணி காதல்தான் பெண்களுக்கு பிடிக்குமென நம்பி, அந்த பாணியில் காதலிக்க பழகிய ஆண்களின் நிலை என்னவாக இன்று இருக்கும்?

மணிரத்னம் பட நாயகன் கெளதம் வாசுதேவ மேனன் பட நாயகியை காதலித்த கதைதான்!

தனக்கான identity-யை பற்றி கவலை கொள்ளும் பெண்ணை, அவளின் எண்ணங்கள், ஸ்பேஸ் எதையும் பொருட்படுத்தாமல் காதலிக்கும் ஆண்களுக்கு புரியவே போவதில்லை.

மேலே சொன்ன காட்சிகளை கெளதம் பட நாயகியரின் மனநிலைகளோடு ஒப்பிட்டு பாருங்களேன்.

"Listen.. இது உன் சட்டையா இருக்கலாம்... கழட்டிக் குடுன்னு சொல்லி ரொமான்ஸ் பண்ண நினைக்கறதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக். Wait till I change to my dress.. Then we'll make love!"

"Carbs வேண்டாம். நான் அல்ரெடி டயட்ல இருக்கேன்.. கைய மட்டும் பார்க்கறே, என் இடுப்ப பார்த்தியா.. டயர் வந்துடுச்சு. குறைக்கணும்.. So நீ சாப்பிடு.. Don't force me!"

"Don't fuc**n' touch me.. நீ நினைச்ச நேரத்துக்கு திட்டுறதுக்கும், நினைச்ச நேரத்துக்கு கட்டிப் பிடிக்கிறதுக்கும் உன் வீட்டு நாய்ன்னு என்னை நினைச்சியா... First let it settle.. எனக்கு தேவை love making.. Sex இல்ல.. !"

New age globalized society-ன் பெண்கள் மனங்களை புரிந்துகொள்ளாத வரை மாதவன்கள், கார்த்திக்குகள் பாடு திண்டாட்டம்தான்.

இதில், "நீயா கேட்டது ஒண்ணு.. நானா ஆசைப்பட்டு வாங்கி வந்தது ஒண்ணு" என பேசும் மெளன ராக மோகன்களும் 'அலைபாயுதே' மாதவன்களும் வேறு இருக்கிறார்கள். தாம் செய்யும் தப்பு என்னவென்றே தெரியாமல், 'காதல்' பட பரத் போல் 'ங்கே.. ங்கே...' என பேஸ்புக்கில் நின்று தலையில் கொட்டிக் கொள்கிறார்கள். May the peace be with them!