Cinema
“அதை என் பெத்தவங்க கிட்ட தான் கேட்கணும்..” - ரகுல் ப்ரீத் சிங்கின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள் ! | VIDEO
ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் ரசிகர் ஒருவர் கேள்வியெழுத்திப்பியபோது 'அதை என்னை பெத்தவங்க கிட்ட தான் கேட்கணும்' என்று ரகுல் பதிலளித்துள்ளார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னட மொழியில் அறிமுகமான இவர், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பில் ரசிகர்களை ஈர்த்த இவர், தமிழில், 'தடையறத் தாக்க', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்', 'என்ஜிகே' உள்பட சில படங்களில் தான் நடித்துள்ளார்.
இருப்பினும் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். முன்னணி கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கும். இந்த நிலையில் தற்போது இந்தி மொழி படங்களில் பிசியாக இருக்கும் இவர், தமிழ் மொழியில் குறுகிய படங்களிலேயே நடித்துள்ளார்.
NGK திரைப்படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் இடைவெளி விட்டு தமிழ் சினிமாவில் மீண்டும் தோன்றவுள்ளார். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து மீண்டும் இந்தி படம் ஒன்றை தனது கைவசம் வைத்திருக்கும் இவர், தெலுங்கு, தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு இவரும் பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரும் காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் விரைவில் திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தனர். ஜாக்கி பக்னானி தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்விஎழுப்பி வரும் நிலையில், ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகுலிடம் திருமணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர்,, "அதை என்னை பெத்தவங்க கிட்ட தான் கேட்கணும்.. அவங்களும் அதையேதான் கேட்கிறாங்க.." என்றார்.
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !