Cinema
உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்'.. இசை & ட்ரைலர் நாளை வெளியீடு.. - ரசிகர்கள் எதிர்பார்ப்பு !
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.
அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு பக்கம் பொது சேவை, மறுபக்கம் சினிமா என்று தன்னை எப்போதும் பிசியாக இருக்கும் உதயநிதியின் அடுத்த படத்தை, 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிக்கிறது.
'மாமன்னன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக உதயநிதி நடிப்பில் 'தடம்' பட இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படம் உருவாகிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
இவர்களுடன் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் இதற்கு கோரெல்லி இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் டீசர் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தின் டீசரை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் 'ஹே புயலே' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 4 மணிக்கு வெளியான இந்த பாடலை கார்க்கி எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்திய பிரகாஷ் பாடியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் முழு பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை, சத்யம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?