Cinema
3 நாட்களாக #1 on Trending : உலகளவில் தொடர் சாதனை படைக்கும் "ரஞ்சிதமே" பாடல்.. படும் குஷியில் ரசிகர்கள் !
'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' பாடல் தொடர்ந்து 3 நாட்களாக NO 1 ட்ரெண்டிங்கில் கலக்கி வருவதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.
இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படத்துடன் போட்டியிடும் என்று எதிர்பார்ப்பில் இந்த படம் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடப்பெற்றுள்ள "ரஞ்சிதமே..ரஞ்சிதமே.." என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியுள்ளார். மேலும் இப்படத்தின் பாடலின் மெட்டு "மொச்சக்கொட்ட பல்லழகி.." என்ற பாடலை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலித்தும் வருகின்றனர்.
எதிர்மறை விமர்சனங்கள் பல இருந்தாலும் தொடர்ந்து 3 நாட்களாக உலகளவில் NO 1 ட்ரெண்டிங்கில் இந்த பாடல் இடம்பெற்று பெரும் சாதனையை படைத்துள்ளது. 3 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்த இந்த பாடல் ரசிகர் மத்தியில் வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!