Cinema
35 ஆண்டுகள் காத்திருப்பு; கமல்ஹாசன், மணிரத்னம், AR.ரகுமான் கூட்டணியில் உருவாகும் Biggest combo கமல் 234!
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது 68வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக தனது 234வது படத்தை 35 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக தனது அதிகாரபூர்வ அறிவிப்வை வெளியிட்டுள்ளார்.
கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது 'விக்ரம்'. 'விக்ரம்' திரைப்படம் ரூ.450 கோடி வரை வசூலை வாரிக்குவித்துள்ளது. `விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர்கள் எஹ்.வினோத், பா.ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்களுடன் கமல் இணையவுள்ளதாக அவ்வபோது தகவல் வெளியாகி வந்தது. தனது 234வது படத்தை கமல் யாரிடம் கொடுக்கவிருக்கிறார் என்ற ஏக்கமும் ரசிகர் மத்தியில் நிறைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த 1987-ம் ஆண்டு மும்பை 'தாதா' கதையை மையமாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் 'நாயகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைக் கொடுத்தது. அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்காதது ரசிகரிகளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று சுமார் 500 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுக்கொடுத்தது.
விகரம் - பொன்னியின் செல்வன் இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் 'கமல் 234' படம் உருவாகவுள்ளது. இவர்களுடையே கம்போ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாது தொடர்ந்து வெற்றிப்படங்களை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப்படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!