Cinema
100 கோடியை நெருங்கும் 'சர்தார்'.. மாபெரும் வெற்றிக்காக இயக்குநருக்கு தயாரிப்பாளர் கொடுத்த Surprise..
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவிக்கும் நிலையில், அதிரைப்பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் 'சர்தார்'. தண்ணீர் திருட்டு, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது திகழ்கிறது.
சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் போட்டியாக தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் களம் கண்ட சர்தார், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரையரங்கு உரிமையை பெற்றுள்ளது.
பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் விஷாலின் இரும்புத்திரை படத்தில் இணையத்தின் வழியாக நடக்கும் குற்றத்தை எடுத்துரைக்கும் படமாக திரை ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படம் அறிவுத் திருட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும், அது எதிர்பார்த்த அளவு வெற்றியை ஈட்டவில்லை.
தற்போது சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இவரது எழுத்து, இயக்கத்தில் வெளியாகியுள்ள தண்ணீர் திருட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'சர்தார்' வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படம் வெளியான 12 நாட்களிலேயே சுமார் 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தற்போது திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதால், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வெற்றியை தொடர்ந்து 'சர்தார் 2' படம் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு, தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், 'லான்சான் டொயோட்டா' காரை (Lanson Toyota car) பரிசாக வழங்கியுள்ளார். இந்த புதிய காரின் சாவியை நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ். மித்ரனிடம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!