Cinema
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடி உடைப்பு.. மர்ம நபர்களுக்கு போலிசார் வலைவீச்சு !
பிரபல இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்துள்ளதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் பிரபல இயக்குநராக இருப்பவர் ஆர்.கே.செல்வமணி. இவரது மனைவி நடிகை ரோஜா. ஆர்.கே.செல்வமணி தற்போது தமிழ் திரை சங்கமான, பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்து வந்த நிலையில், நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருந்து வருகிறார்.
பெப்சி திரைப்பட அமைப்பின் முன்னாள் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார். எனவே, இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடியை மரம் நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆந்திராவில் உள்ள அரசியல் மோதலில், இவரது மனைவியும், ஆந்திராவின் அமைச்சருமான ரோஜாவின் கார் கண்ணாடி, அம்மாநில எதிர்க்கட்சியான பவன் கல்யாணின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது.
முன்னதாக நடிகர் விஷால் வீட்டின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரிக்கையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறால் தவறுதலாக விஷாலின் கண்ணாடி தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!