Cinema
"நடிகை பூர்ணாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா.." -பல மாதங்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட புகைப்படங்கள் Viral!
நடிகை பூர்ணாவுக்கு திருமணமானதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தவர் நடிகை பூர்ணா. பரத், வடிவேலு நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு, கந்தக்கோட்டை, ஆடுபுலி ஆட்டம், வேலூர் மாவட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதோடு சசிகுமார் நடிப்பில் சகோதரர் பாசத்தை மையமாக கொண்டு வெளியான 'கொடிவீரன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மேலும் திரை ரசிகர்களை கவர்ந்தார்.
ஷாம்னா கசீம் என்ற பெயர் கொண்ட இவர், திரைக்காக பூர்ணா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம், தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் நடித்து, அந்த பகுதியல் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.
அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பையும் பெற்றார். தற்போது தமிழில், படம் பேசும், அம்மாயி, பிசாசு 2 போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை பூர்ணா திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவரும், பூர்ணாவும் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். இவர்கள் நட்பு காதலாக மாறி, கடந்த மே மாதம் இரு வீட்டார் சம்மதத்துடனும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனிடையே இருவரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக செய்திகள் பரவ, இது குறித்து பூர்ணா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடிகை பூர்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பூர்ணா - ஆசிப் அலி தம்பதிக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!