Cinema
லோகேஷுடன் இணையும் KGF யாஷ்..? - வெளியானது புதிய UPDATE ஆல் ரசிகர்கள் எதிர்பார்ப்பு !
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அதன் பின் 'கைதி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கும் இவர், அடுத்து கைதி 2, விக்ரம் 2 படங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ஹாலிவுட்டின் 'மார்வல்' காம்பினேஷன் போல் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பிணைப்பு உள்ளது போல் எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 'தளபதி 67' படத்தையும் இவர் இயக்குவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று, சினிமா தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், அதில் KGF 1 மற்றும் KGF 2-வில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலீயல், யஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?