Cinema
முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மைகொண்டவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.
இவரது குரலில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. மேலும் தெலுங்கு படத்தில் வெளியான 'daimond girl' பாடலுக்காக விருதும் வாங்கியுள்ளார். சமீபத்தில் கூட வெளியான 'வாரியர்' திரைப்படத்தில் வெளியான 'புல்லட்' பாடல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது.
இதையடுத்து வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், அந்த படமும் ஹிட் அடித்தன. சிம்புவின் கம்பேக் மூலம் தொடர்ந்து பாடல், படங்கள் என ஹிட் அடித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் ரஜினியுடன் 'காலா' படத்திலும், அஜித்துடன் 'வலிமை' படத்திலும் நடித்த பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி மற்றும் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா, சிம்புவின் நண்பரான நடிகர் மஹத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் XL' படத்தில் இடம்பெற்றுள்ள #TaaliTaali என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சிம்பு, "ஹிந்தியில் எனது முதல் பாடல் இதோ.., பாலிவுட்டில் பாடகராக நான் அறிமுகமாகியுள்ளேன். இது எனது நண்பன் மகத்துக்காக.. உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.. #TaaliTaali பாடலுடன் டபுள்எக்ஸ்எல் நண்பர்களின் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!