Cinema
அதிகாலையில் கோயில் குளத்தில் குளிக்க சென்ற நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள இரிஞ்சலகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (வயது 41). இவர் மலையாள திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், 'உரும்புகள் உறங்கரில்லா', 'ஒன்ஸ் இன் மைன்ட்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 5 மணியளவில் தனது வீட்டின் அருகியுள்ள கூடல்மாணிக்யம் கோயிலின் தெற்குக் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரை தேடி வந்த அவரது உறவினர்கள், இவரது காலனி, உடைகள் குளத்தின் கரையில் கிடப்பதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அவரைத் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தீபு பாலகிருஷ்ணனின் சடலம் மீட்கப்பட்டது.
பின்னர் அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கோயிலுக்கு குளிக்க சென்ற நடிகர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் கேரள திரையுலகம், ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!