Cinema
பொன்னியின் செல்வன் : “எனக்கு பொறாமையாக இருக்கிறது” - இணையத்தில் வைரலாகும் நடிகை மீனாவின் பதிவு !
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 30-ம் தேதி (நாளை) உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிவுள்ளது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஸ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என்று திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை மீனா தனது மனதில் உள்ள ஆசையை தனது சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். 90'ஸ் களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. அப்போதுள்ள முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு தேவா என அனைவருடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து 90'ஸ் திரை ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு திரையுலகம் ஆறுதல் கூறியது.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்'திரைப்படத்தில் இடப்பெற்றுள்ள நந்தினி கதாபத்திரத்தை நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்துள்ளார். அது குறித்து தனது சமூக வலைதளம் பக்கத்தில் தனக்கு பொறாமையாக இருப்பதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சரி, என்னால் இனி அதை மறைத்து வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது. என் நெஞ்சை அடைக்கிறது.. என் வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். அது PS1-ல் எனது கனவு கதாபாத்திரமான நந்தினியாக நடிப்பதால் ஐஸ்வர்யா ராய் பச்சன் மீது. இருப்பினும் நடிகர்கள் மற்றும் குழுவினர் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!