Cinema
பெரிய பழுவேட்டரையராக ரஜினி நடித்திருந்தால் நல்லா இருந்துருக்கும்.. ஆனால்..," - சரத்குமார் கூறியது என்ன ?
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 30-ம் தேதி (நாளை மறுநாள்) உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிவுள்ளது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஸ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என்று திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் திறமை, கடல் கடந்த வாணிபம், கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கியது உள்ளிட்டவை தெரியவரும்.
வட இந்தியாவில் இன்னும் கோட்டைகள் உள்ளன. ஆனால் இங்கு இல்லை. அதேபோல் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா தளமாக இன்னும் மேம்படுத்த வேண்டும். முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் பார்க்கும் இடமாக மாற்ற வேண்டும்.
பெரிய பழுவேட்டரையராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் உடல்வாகு அந்த அளவுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் சினிமாவில் அனைத்தும் சாத்தியம். எனவே ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு கூச்சமாக இருந்தது. அதை பார்த்துவிட்டு இயக்குனர் மணிரத்னம் உங்களுக்கு ரொமான்ஸ் வராதா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு கஷ்டப்பட்டு நான் நடித்தேன்" என்று கூறினார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!