Cinema
காதல் விவகாரம்.. 'வாய்தா' பட நடிகை எடுத்த விபரீத முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா என்கிற தீபா. இவர் தமிழ்ப் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் 'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அவர் சென்னை நெற்குன்றம் அன்னம்மாள் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் ஜெசிகா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெசிகா அறையிலிருந்த கடிதம் ஒன்றையும் போலிஸார் கைப்பற்றினர்.
அதில் நான் ஒருவரைக் காதலித்து வந்தேன் ஆனால் அவர் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெற்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!