Cinema

கமலின் 'விக்ரம்' படம் பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது.. திரை ரசிகர்கள் வியப்பு-அப்படி என்ன செய்தார் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் 'விக்ரம்'. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் திரைப்படங்களில் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. தற்போது 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த 'விக்ரம்' திரைப்படத்திற்கு இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தை திரையரங்கிலேயே கமல் ரசிகர்கள் 2 முறைகளுக்கு மேல் பார்த்து வருகின்றனர்.

விக்இந்த நிலையில் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான உதய பாரதி என்பவர் 'விக்ரம்' திரைப்படத்தை திரையரங்கில் மட்டுமே 50 முறை பார்த்து அசத்தியுள்ளார். இதையடுத்து இவரது சாதனையை பாராட்டும் விதமாக 'லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' உதய பாரதிக்கு பதக்கமும், சான்றிதழமும் அளித்து கௌரவித்துள்ளது.

இது குறித்து ரசிகர் உதய பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விக்ரம் படத்தை 50 முறை பார்த்து சாதனை செய்துள்ளேன். என்னை கெளரவித்த லின்கன் புக் அஃப் ரெக்கார்ட்ஸுக்கு நன்றி. எனக்கு மன நிம்மதி தரும் ஒரே நபர், கமல்ஹாசன் தான்." என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சாதனை படைத்த இவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ‘விக்ரம்’ படத்திற்கு இணையாக நகரும் ‘The Gangster, The Cop, The Devil’ - கொரியன் சுவாரஸ்ய விமர்சனம் இதோ!