Cinema
சினிமா ரசிகர்களுக்கு ஓர் அதிரடி ஆஃபர்.. திரையரங்கில் எந்தப் படம் பார்த்தாலும் ரூ.75 தான் டிக்கெட் விலை!
இந்தியாவில் ஜி.எஸ்.டி வந்த பிறகு சினிமா டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும், திரையரங்கு பராமரிப்பு போன்ற பல செலவுகள் இருப்பதால் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரூ.75க்கு மட்டும் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் திரையரங்குகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாலும் அதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆன்லைன் தளங்களில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. PVR, INOX போன்ற திரையரங்க நிறுவனங்களும் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன.
அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் தங்களது தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் குறைந்த விலையில் அங்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!