சினிமா

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு சார்பில் திரை கலைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது விருது நிகழ்ச்சிக்கான தேதியை அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்த விருதுக்கான தேதியும் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டன. அவர் ஆட்சியில் இறுதி வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குறித்து விளம்பர மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் "திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார்.

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான சிறந்த படங்கள், நடிகர்கள் என விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அது பின் வருமாறு:

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2009

சிறந்த படங்களுக்கான பரிசுகள் :

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - பசங்க

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - மாயாண்டி குடும்பத்தார்

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - அச்சமுண்டு அச்சமுண்டு

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  • சிறந்த நடிகர் - கரண் (மலையன்)

  • சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்)

  • சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)

  • சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு)

  • சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ்ராஜ் (வில்லு)

  • சிறந்த நகைச்சுவை நடிகர் - கஞ்சா கருப்பு (மலையன்)

  • சிறந்த குணச்சித்திர நடிகர் - சரத்பாபு (மலையன்)

  • சிறந்த குணச்சித்திர நடிகை - ரேணுகா (அயன்)

  • சிறந்த இயக்குநர் - வசந்தபாலன் (அங்காடித் தெரு)

  • சிறந்த கதையாசிரியர் - சேரன் (பொக்கிஷம்)

  • சிறந்த உரையாடல் ஆசிரியர் - சி. பாண்டிராஜ் (பசங்க)

  • சிறந்த இசையமைப்பாளர் - சுந்தர் சி. பாபு (நாடோடிகள்)

  • சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (பசங்க)

  • சிறந்த பின்னணிப் பாடகர் - டாக்டர், பால முரளிகிருஷ்ணா (பசங்க) (மறைவு)

  • சிறந்த பின்னணிப் பாடகி - மஹதி (அயன்)

  • சிறந்த நடன ஆசிரியர்- தினேஷ் (யோகி)

  • சிறந்த குழந்தை நட்சத்திரம் - டி. எஸ். கிஷோர் (பசங்க), ஸ்ரீராம் (பசங்க)

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2010

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - மைனா

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - களவாணி

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - புத்ரன்

  4. சிறந்த படம் (சிறப்புப் பரிசு) - நம்ம கிராமம்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  1. சிறந்த நடிகர் - விக்ரம் (ராவணன்)

  2. சிறந்த நடிகை - அமலாபால் (மைனா)

  3. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - ஓய். ஜி. மகேந்திரா (புத்ரன்)

  4. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - சங்கீதா (புத்ரன்)

  5. சிறந்த வில்லன் நடிகர் - எஸ். திருமுருகன் (களவாணி)

  6. சிறந்த நகைச்சுவை நடிகர் - ஜெ. தம்பி ராமையா (மைனா)

  7. சிறந்த குணச்சித்திர நடிகர் - பி. சமுத்திரகனி (ஈசன்)

  8. சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன் (களவாணி)

  9. சிறந்த இயக்குநர் - பிரபு சாலமன் (மைனா)

  10. சிறந்த கதையாசிரியர் - அ. சற்குணம் (களவாணி)

  11. சிறந்த உரையாடல் ஆசிரியர் - அ. சற்குணம் (களவாணி)

  12. சிறந்த இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா (பையா)

  13. சிறந்த பாடலாசிரியர் - பிறைசூடன் (நீயும் நானும்) (மறைவு)

  14. சிறந்த பின்னணிப் பாடகர் - கார்த்திக் (ராவணன்)

  15. சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (எந்திரன்)

  16. சிறந்த நடன ஆசிரியர்- ராஜு சுந்தரம் (பையா)

  17. சிறந்த குழந்தை நட்சத்திரம் - அஸ்வத் ராம் (நந்தலாலா)

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2011

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - வாகைசூடவா

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - தெய்வத்திருமகள்

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - உச்சிதனை முகர்ந்தால்

  4. சிறந்த படம் (சிறப்புப் பரிசு) - மெரினா

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  1. சிறந்த நடிகர் - விமல் (வாகைசூடவா)

  2. சிறந்த நடிகை - இனியா (வாகைசூடவா)

  3. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - சிவகார்த்திகேயன் (மெரினா)

  4. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - அனுஷ்கா (தெய்வத்திருமகள்)

  5. சிறந்த வில்லன் நடிகர் - எபொன்வண்ணன் (வாகைசூடவா)

  6. சிறந்த நகைச்சுவை நடிகர் - மனோ பாலா (பல படங்கள்)

  7. சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (காஞ்சனா)

  8. சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (தெய்வத்திருமகள்)

  9. சிறந்த குணச்சித்திர நடிகை - லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)

  10. சிறந்த இயக்குநர் - ஏ. எல்.விஜய் (தெய்வத்திருமகள்)

  11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாரா (தெய்வத்திருமகள்)

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2012

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - வழக்கு எண்.18/9

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - சாட்டை

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - தோனி

  4. சிறந்த படம் (சிறப்புப் பரிசு) - கும்கி

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  1. சிறந்த நடிகர் - ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்)

  2. சிறந்த நடிகை - லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்)

  3. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - விக்ரம் பிரபு (கும்கி)

  4. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - சமந்தா (நீ தானே என் பொன்வசந்தம்)

  5. சிறந்த வில்லன் நடிகர் - விஜய் சேதுபதி (சுந்தரபாண்டியன்)

  6. சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (மனம்கொத்தி பறவை மற்றும்

  7. பல படங்கள்)

  8. சிறந்த நகைச்சுவை நடிகை - ஆர்த்தி (பாரசீக மன்னன்)

  9. சிறந்த குணச்சித்திர நடிகர் - நரேன் (மனம்கொத்தி பறவை)

  10. சிறந்த குணச்சித்திர நடிகை - ரேவதி (அம்மாவின் கைப்பேசி)

  11. சிறந்த இயக்குநர் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9)

  12. சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (கும்கி)

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2013

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - இராமானுஜன்

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - தங்கமீன்கள்

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - பண்ணையாரும் பத்மினியும்

  4. சிறந்த படம் (சிறப்புப் பரிசு) - ஆள்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  1. சிறந்த நடிகர் - ஆர்யா (ராஜா ராணி)

  2. சிறந்த நடிகை - நயன்தாரா (ராஜா ராணி)

  3. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்)

  4. (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)

  5. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - நஸிரியா நசீம் (நேரம்)

  6. சிறந்த வில்லன் நடிகர் - விடியல் ராஜி (ஆள்)

  7. சிறந்த நகைச்சுவை நடிகர் - சத்யன் (ராஜா ராணி)

  8. சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)

  9. சிறந்த குணச்சித்திர நடிகை - துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

  10. சிறந்த இயக்குநர் - ராம் (தங்கமீன்கள்)

  11. சிறந்த இசையமைப்பாளர் - ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)

  12. சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாதனா (தங்கமீன்கள்)

2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. எந்தெந்த படங்கள், நட்சத்திரங்களுக்கு விருது ?- பட்டியல் இதோ !

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2014

  1. சிறந்த படம் (முதல் பரிசு) - குற்றம் கடிதல்

  2. சிறந்த படம் (இரண்டாம் பரிசு) - கோலி சோடா

  3. சிறந்த படம் (மூன்றாம் பரிசு) - நிமிர்ந்துநில்

  4. சிறந்த படம் (சிறப்புப் பரிசு) - காக்கா முட்டை

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் :

  1. சிறந்த நடிகர் - சித்தார்த் (காவியத் தலைவன்)

  2. சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

  3. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)

  4. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - ஆனந்தி (கயல்)

  5. சிறந்த வில்லன் நடிகர் - பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)

  6. சிறந்த நகைச்சுவை நடிகர் - கே. ஆர். சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)

  7. சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத் தலைவன்)

  8. சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத் தலைவன்)

  9. சிறந்த இயக்குநர் - ராகவன் (மஞ்சப்பை)

  10. சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான் (காவியத் தலைவன்)

  11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - விக்னேஷ், (காக்கா முட்டை), ரமேஷ் (காக்கா முட்டை )

banner

Related Stories

Related Stories