Cinema
படிக்க ஆர்வம் இருந்தும் பணம் இல்லாமல் தவித்த ரசிகரின் மனைவி.. வெளிநாட்டில் படிக்க வைக்கும் நடிகர் சூர்யா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. 'சூரரை போற்று' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதை நடிகர் சூர்யா வாங்க உள்ளார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் 'அகரம்' என்ற அறக்கட்டளை தொடங்கி கல்வி கற்க முடியாத ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இவரது 'அகரம்' அறக்கட்டளை மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இவரைப் போலவே அவரது தம்பி நடிகர் கார்த்தியும் உழவன் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகரின் மனைவி மேற்படிப்பிற்கு நடிகர் சூர்யா உதவியுள்ளார். சூர்யா ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக இருப்பவர் மனோஜ். அவரது மனைவி தீபிகா மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் கையில் பணம் இல்லை.
இதனைத் தெரிந்துகொண்ட நகடிர் சூர்யா 'அகரம்' அறக்கட்டளையின் மூலம் அயர்லாந்து நாட்டில் மேல்படிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். இதையடுத்து தீபா மேற்படிப்பிற்காக அயர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் நடிகர் சூர்யா தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்கள் மனம் சொல்வதை எப்போதும் கேளுங்கள் என வாழ்த்தி வழி அனுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!