Cinema
"சும்மா கிழி.." தியேட்டர் திரையை கிழித்த தனுஷ் ரசிகர்கள்.. பாதியிலே நிறுத்தப்பட்ட திருச்சிற்றம்பலம் படம்!
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (18.08.2022) வெளியானது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியாவதால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் நேற்று காலை முதலே தியேட்டரில் அதிரடி காட்டி வந்தனர்.
அப்பா மகன் பாசத்தை அடிப்படையாக் கொண்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் 'ஹிட்' என அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் முதல்காட்சி நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, திரைக்கு முன் ஒலித்த பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரிப்பில் திடீரென திரையரங்கின் திரையைக் குத்தி கிழித்தனர். இதனால் அந்த திரையரங்கில் திரையிட்டுக்கொண்டிருந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!