Cinema
பிரபல VJ கௌஷிக் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் இரங்கல் !
சமூக வலைத்தளங்கள் மூலம் சினிமா செய்திகள், சினிமா அறிவிப்புகள், விமர்சனங்கள் போன்ற சினிமா சார்ந்த தகவல்களை ரசிகர்களுக்கு கூறிவருபவர் கௌஷிக். இதன் காரணமாக பல்வேறு தரப்பினர் இவரை பின்தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், கௌஷிக் நேற்று மாலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36. இறக்கும் முன்னர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள சீதா ராமம் என்ற படத்தின் வசூலை பற்றி பதிவிட்டிருந்தார்
அவர் உயிரிழந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் .“இது மனதை நொறுக்குகிறது!! நிம்மதியாக இருங்கள் சகோதரா.. சீக்கிரம் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்
நடிகை கீர்த்தி சுரேஷ், “இந்தச் செய்தியைக் கேட்டு எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இது நம்பமுடியாதது!! அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக என் இதயம் துடிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்! இனி கௌசிக் இல்லை என்று நம்ப முடியவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு , ” நம்ப முடியவில்லை! சில நாட்களுக்கு முன்பு அவருடன் பேசினேன்! வாழ்க்கை உண்மையில் எதிர்பாராதது! நியாயமில்லை! கௌசிக்கின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! மிக விரைவில் போய்விட்டீரே நண்பரே என்று பதிவு செய்துள்ளார்.
இதுபோல நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கௌஷிக் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !