Cinema
பிரபல நடிகர் தற்கொலை முயற்சி... ‘மனைவி, மாமியார் கொடுமை தாங்கமுடியல’ - போலிஸிடம் குமுறல் !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள கஸ்பா என்ற பகுதியில் வசித்து வருபவர் சைபல் பட்டாச்சார்யா. இவர் தனது மனைவி, மாமியாருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். பெங்காலி சின்னத்திரை துணை நடிகரான இவர், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தனக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ, தனது உடலிலே காயங்களை ஏற்படுத்தி கோபத்தை தன் மேல் காட்டி வந்துள்ளார். மேலும் அவரிடம் இது குறித்து பெரிதாக யாரும் கேட்டதும் இல்லை.
இந்த நிலையில், இன்று மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட சைபல், தனது உடலில் அதிகமான காயங்களை ஏற்படுத்திக்கொண்டார். மேலும் காயம் ஏற்படுத்திய பின்னர், இரத்த வழித்தலோடு அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்த வீடியோவில் தனது இந்த செயலுக்கு காரணம் தனது மனைவி மற்றும் மாமியார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் வீடியோ வெளியிட்ட பின்னர், இவரை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தகவலறிந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் கத்தியை எடுத்து தனது உடலில் தானே காயங்களை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்தது. தற்போது அவர் சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவரிடம் பின்னர் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். மேலும் அவரது முகநூல் பக்கத்தில் இருந்த விடியோவும் அளிக்கப்பட்டதாகவும் கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்காலி நடிகர்களான பல்லவி டே, பிதிஷா டி மஜும்தார், மஞ்சுஷா நியோகி ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது பெங்காலி நடிகரின் செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!