Cinema
KGF பட வில்லன் நடிகர் சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - பெங்களூரு சாலையில் நடந்த கோரம் !
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நெகட்டிவ் நடிகராக விளங்கி வருபவர் பி.எஸ்.அவினாஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான இந்திய அளவில் பேசப்பட்ட KGF திரைப்படத்தில் கேங்க்ஸ்டெராக நடித்தார். தொடர்ந்து அதன் இரண்டாம் பக்கத்திலும் நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.
தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர், தனது பென்ஸ் காரில், தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கம். இவ்வாறாக நேற்று உடற்பயிற்சி கூடத்திற்கு அவர் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!