Cinema
“இவர்கள்தான் உலகம்” : வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளா? - சின்மயி சொன்ன விளக்கம் என்ன?
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருபவர் சின்மயி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவிந்திரனை திருமணம் செய்து கொண்டார். சுமார் 8 ஆண்டுகள் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இரட்டை (ஒரு ஆண், ஒரு பெண்) குழந்தைகளுக்கு தான் தாயாகியுள்ளதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் குழந்தைகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தையின் பெயர் 'த்ரிப்த்தா' என்றும், ஆண் குழந்தைக்கு 'ஷர்வாஸ்' என்றும் பெயர் சூட்டிய சின்மயி, குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்திருக்குமாறு உள்ள புகைப்படத்தை பகிர்ந்து "எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகம்" என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் சின்மயிடம் சில சமூக வலைதளவாசிகள் "இது வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையா?" என்று கேள்விகேட்டனர். அதோடு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவும் இல்லை, அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிரவில்லை என்றனர்.
அதற்கு சின்மயி, "நான் கர்ப்பமாக இருந்த விஷயம் எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். முன்னதாக சொல்லியிருந்தால் அதற்கு சிலர் பல கதைகளை உருவாக்கி எனக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருப்பார்கள். அதனால்தான் வெளியே சொல்லவில்லை" என்று சின்மயி விளக்கமளித்திருக்கிறார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கும், நடிகர் ராகுல் ரவிச்சந்திரனுக்கும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!