Cinema

“அம்மாவுக்கு ‘DATING APP’ install செய்து, கற்றுக்கொடுத்த மகள்..” : தமிழ் பட நடிகை நெகிழ்ச்சி !

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடகரும், நடிகையுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, தான் தனிமையில் இருப்பதை உணர்ந்த தனது மகள் DATING APP பயன்படுத்த கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள் என்று பிசியாக இருக்கும் சுசித்ரா, 1991 ஆம் ஆண்டு வெளியான 'சிவரஞ்சனி' என்ற தமிழ் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, 1995 ஆம் ஆண்டு 'சின்ன சின்ன ஆசை' என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சுசித்ரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ’கபி ஹான் கபி நா’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சுசித்ரா, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவேரி என்று ஒரு மகள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு சிங்கிள் பேரண்டாக வாழ்ந்துவரும் சுசித்ரா, தனிமையில் வாடியுள்ளார். இதனை உணர்ந்த மகள் காவிரி, தனது தாயை டேட்டிங் அப் பயன்படுத்தும்படி வற்புறுத்தியுள்ளார்.

மேலும் அதனை அவரே சுசித்ராவின் போனில் install செய்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்துள்ளார். இருப்பினும் சுசித்ராவுக்கு இது பிடிக்கவில்லை. மகளின் ஆசைக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். பின்னர் டேட்டிங் அப் மூலம் பழக்கமான நபர்களை நண்பர்களாக்கிக் கொண்டுள்ளார் சுசித்ரா.

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுசித்ரா, விவாகரத்துக்குப் பிறகு தனது மகள் காவேரி தனது பெயரை டேட்டிங் வலைதளங்களில் பதிவுசெய்து, ஆண்களுடன் டேட்டிங் செய்யுமாக வற்புறுத்தினார். அதனால் ஒரு வருடமாக யாருக்கும் தெரியாத ஒரு ஆணுடன் தான் உறவில் இருந்ததாகவும், பின்னர் பிரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தான் டேட்டிங் செய்ய விரும்பவில்லை என்பதை இப்போது தன் மகளுக்கு புரியவைத்ததாகவும், ஆண்கள் தனக்கு விரும்பத்தகாத சில செய்திகளை அனுப்பிய பிறகு டேட்டிங் அப் -ல் இருந்து தனது படங்களையும் நீக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also Read: சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் செய்தியாளர்.. தாலிபான்களால் தொடரும் அவலம்! - பின்னணி என்ன?