Cinema
“நினைத்து நினைத்து பார்த்தேன்” - பிரபல பின்னணி பாடகர் கே.கே மறைவு.. சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்!
பிரபல பின்னணி இசை பாடகர் கே.கே (கிருஷ்ணகுமார் குன்னத்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53.
கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். ரசிகர்களால் கே.கே என அழைக்கப்படும் இவர், இந்திய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக, பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளிலும் கே.கே பாடியுள்ளார்.
1999ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணிக்காக இவர் பாடல் உலகளவில் பெரும் பரபலமானர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை மூலம் தமிழ் திரைப்பட்டங்களில் அறிமுகமான இவர், காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட 66 பாடல்களை பாடி, ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டது அவரது திடீர் மறைவுக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!