Cinema
ஒரே மாதத்தில் 3 பேர் : தோழி இறந்த சோகத்தில் மற்றொரு இளம் நடிகை தற்கொலை.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிதிஷா தே மஜூம்தார் என்ற இளம் நடிகை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகத்தில் சம்பத்திலிருந்து திரையுலகினர் மீள்வதற்குள், மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா படோலி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுஷா நியோகி. இவர் தற்கொலை செய்து கொண்டு பிதிஷா தே மஜூம்தாரின் தோழியாவர். மேலும் இவருடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தோழிகளான இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோழி பிதிஷா தே மஜூம்தார் தற்கொலை செய்து கொண்ட சம்பவதில் இருந்தே மஞ்சுஷா நியோகி கடும் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெருங்கிய தோழி இறந்த துக்கம் தாங்காமல் மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மேற்குவங்கத்தில் பல்லவி டே என்ற இளம் நடிகை இம்மாதம் தொடக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பிதிஷா தே மஜூம்தாரும், தற்போது மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டனர்.
ஒரேமாத்தில் மட்டும் மூன்று இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!