Cinema
“வசூல் வெறும் ரூ.3 கோடி - 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை” : மோசமான சாதனை படைத்த கங்கனா ரனாவத் !
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிக்கும் படங்கள் பொதுவாக நல்ல வசூல் பெறும். மேலும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அவரின் நடிப்பு குறித்துப் பரவலாகப் பாராட்டப்படும். இதனாலேயே கங்கனா ரனாவத் கதையில் தனக்கு அதிக முக்கியம் இருக்கும் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20ம் தேதி 'தாக்கட்' படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக 'தாக்கட்' உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரேனிஷ் காய் இயக்கியுள்ளார்.
’தாக்கட்’ திரைப்படம் வெளியாகி அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே குறைவான வசூலையே பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை ரூ. 3.5 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளது. அதிலும் திரைப்படம் வெளியான 8வது நாளில் இந்தியா முழுவதும் மொத்தம் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகை குறைந்ததை அடுத்துப் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரிய வசூல் செய்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூல் சாதனையைப் பெற்று வருவது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்து.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!