Cinema
வைரலாகும் விக்ரம் ட்ராக் லிஸ்ட்.. நயன்தாராவின் ‘ஓ2’ வெளியீடு எப்போது? இது 5in1_Cinemas துளிகள்!
அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ ரிலீஸ் அப்டேட்...
அருள் நிதி நடிப்பில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘தேஜாவு’. அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ஜூன் மாதம் திரையரங்குகளில் ‘தேஜாவு’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிள்ளது.
ரத்தம் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய மகிமா...
விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில் சி.எஸ். அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. இதில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் நடிகை மகிமா நம்பியார்.
நயன்தாராவின் ‘ஓ2’ படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது...
நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படங்களில் ஒன்று ‘ஓ2’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ஜி.எஸ். விக்னேஷ் இயக்கி வருகிறார்.
முழுக்க முழுக்க பேருந்திலே நடக்கும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு வில்லனாக ‘கே13’ பட இயக்குனர் பரத் நீலகண்டன் நடிக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலயில் படத்தின் டீஸர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இன்று வெளியாகிறது விக்ரம் ட்ரைலர் மற்றும் ஆடியோ!
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு இன்று கோலகலமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'House of the Dragon' சீரிஸின் சீசன் 2 உரிமையையும் கைப்பற்றிய எச்.பி.ஓ...
உலகளவில் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று தான் ‘கேம் ஆஃப் த்ரோன்’. 8 சீசன்களாக வெளியான இந்த நெடுந்தொடரின் முந்தைய கதையை தற்போது சீரிஸாக எடுத்து வருகின்றனர். 'House of the Dragon' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் சீசன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த சீரிஸின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதன் சீசன் 2 உரிமையையும் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான ‘எச்.பி.ஓ’ கைப்பற்றியுள்ளது.
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !