Cinema
100 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த யாஷ்... KGF நாயகனுக்கு குவியும் பாராட்டுகள்!
கேஜிஎஃப் என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஒரே படத்தால் இந்திய சினிமாவே கன்னட திரையுலகை மேல்நோக்கி வகையில் உயர்ந்திருக்கிறது.
அந்த படங்களில் நடித்ததன் மூலம் நாயகன் யாஷ் உலகளவில் மிகப்பெரிய பிரபலத்திற்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இந்தியாவிலேயே 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் செய்த படங்களில் பட்டியலில் கேஜிஎஃப்-2ம் இணைந்துள்ளது.
இதன் காரணமாக நடிகர் யாஷை தங்களது நிறுவனத்துக்காக நடிக்க வைக்க விளம்பர நிறுவனங்கள் அவரை அணுகி வருகின்றன.
இந்த நிலையில் பான் மசாலாக்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பல கோடி வருமானத்துடன் கூட்ட தங்களது விளம்பரத்தில் நடிக்கும் படி யாஷிடம் கேட்டதற்கு எத்தனை கோடிகளை கொடுத்தாலும் என்னை நம்பும் ரசிகர்களை அழிவுப்பாதையில் தள்ளும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
இந்த செய்திதான் சமூக வலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக அமைந்து அவரது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்ததோடு பலர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதேப்போன்று புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!