Cinema
ராக்கி பாயின் பயணம் முடியவில்லை... KGF-3 பற்றி தயாரிப்பாளர் கூறிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கும் வரவேற்பால் இந்திய சினிமாத் துறையே மலைத்து போயிருக்கிறது. படம் வெளியான மூன்றே நாளில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு இதே போன்று வசூல் ரீதியில் பல படங்களும் சாதித்திருந்தாலும் கேஜிஎஃப் படத்துக்கு கிடைத்து வரவேற்பு என்பது வேறு மாதிரியாக இருக்கிறது.
அதாவது ரசிகர்கள் அனைவரும் படத்தின் கதையோடு ஒன்றிப்போய் அடுத்த என்னவாகும் என்ன நடக்கும் என்ற அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புடனேயே திரையரங்குகளை நோக்கி படையெடுக்கிறார்கள்.
இதற்காக சிறிய அளவு முதல் மல்டிபிளக்ஸ் வரை உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் படத்தின் க்ளைமேக்ஸின் போது கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த குறிப்பும் இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் KGF 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இப்போதிருந்தே மேலோங்கியிருக்கிறது.
இந்த நிலையில் கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, மூன்றாம் பாகத்துக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியிருக்கிறது, விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே கேஜிஎஃப்-2 ட்ரெய்லர் வெளியீட்டின் பொது 3ம் பாகம் வெளியாக 8 ஆண்டுகளாவது ஆகும் இயக்குநர் பிரசாந்த் நீல் எனக் கூறியிருந்தார். ஆனால் பிரபாஸ் உடனான சலார் பட வேலைகளுக்கு பிறகு கேஜிஎஃப்-3 படத்தின் பணிகள் தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !