Cinema
'சார்.. விஜய் சார்.. : இதுதான் Fan Girl Moment ஆஹ்' - விஜய்யுடன் ஜோடி சேரும் இளசுகளின் நேஷனல் க்ரஷ்!
நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வரும் வேளையில், அவரது அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்கும் அவரது 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். தமன் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் என இளைஞர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ட்விட்டரில் அறிவித்தது.
இந்த நிலையில், விஜய் 66 படத்துக்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து நெட்டிசன்கள் உட்பட விஜய் மற்றும் ராஷ்மிகா ரசிகர்களால் படு வேகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !