Cinema
“எப்படி இருக்கீங்க?” : நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். தற்போது இந்நிறுவனத்தை கல்பாத்தி அகோரம் நிர்வகித்து வருகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், மாற்றான், தனி ஒருவன், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.
கடைசியாக கல்பாத்தி அகோரம், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், கல்பாத்தி அகோரமின் மகள் ஐஷ்வர்யா கல்பாத்தி - ராகுல் ராய் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும், இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும் வணக்கம் சொல்லி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
மேலும், தி.மு.க இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினுடனும் கைகுலுக்கி கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக்கொண்டார் விஜய்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!