Cinema
“நம்ம பையன் ஒருத்தன் உள்ள இருக்கான்”: தெறிக்கவிட்ட Beast ட்ரெய்லர்- சில நிமிடங்களிலேயே 2 மில்லியன் views!
விஜய்யின் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரை 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியிட்டுள்ளது.
சற்று முன்பு வெளியான ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் சில நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த ட்ரெய்லரில் விஜய்யின் மாஸான காட்சிகள் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !