Cinema
மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரன்ட்.. அவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்ததால் அதிரடி!
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
அதன் பின்பு இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. போலிஸார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜரானார்.
விசாரணையின் போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவரை கைது செய்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!