தமிழ்நாடு

டி.ராஜேந்தரின் கார் ஏறி ஒருவர் பலி.. அதிர்ச்சி கிளப்பும் CCTV காட்சி - நடந்தது என்ன?

சாலையின் குறுக்கே தவழ்ந்து சென்றவர் மீது நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் கார் ஏறியதில் அவர் உயிரிழந்தார்.

டி.ராஜேந்தரின் கார் ஏறி ஒருவர் பலி.. அதிர்ச்சி கிளப்பும் CCTV காட்சி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாலையின் குறுக்கே தவழ்ந்து சென்றவர் மீது நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் கார் ஏறியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் தவழ்ந்தபடி சாலையைக் கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளியான முனுசாமி (50) என்பவர் மீது கார் ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும், அதனால் அவர் தவழ்ந்தபடி சாலையைக் கடக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.

அவர் சாலையைக் கடக்க முயன்றபோது வந்த கார் அவர் மீது ஏறியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் டி.ராஜேந்தருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்தபோது, காரில் டி.ராஜேந்தரின் குடும்பத்தினர் இருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்தியது டி.ஆரின் ஓட்டுநர் செல்வம் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் செல்வம் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories